இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு-சி.சிறீதரன்

111

 

 flood_sritharan_003
பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது.

இரணைமடு பெருங்குளத்தின் நீர் மட்டம் 31 அடியை கடக்கும் நிலையை எட்டியுள்ளதால், குளத்தின் அணைகளின் நிலை மற்றும் விளைச்சல் வயல்களின் நன்மையை கருத்திற்கொண்டு வடமாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு இன்று காலை வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வடமாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர்கள் விவசாய சம்மேளன தலைவர் சிவமோகன் விவசாயிகள் இன்று காலை இரணைமடுக்குளப்பகுதியில் பிரசன்னமாகியிருந்தனர்.

கிளிநொச்சியில் பெருமழை: வெள்ளக்காடாய் நகரம்

நேற்று இரவு முதல் கிளிநொச்சியில் கடும் மழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக கிளிநொச்சி நகரம் மற்றும் கிராமங்கள் பல வெள்ளப்பெருக்கு அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

குளங்கள் நீர் நிரம்பி வான் பாய ஆரம்பித்துள்ளதால் வான் பாயும் பகுதிகளை அண்டிய கிராமங்களை சேர்ந்த மக்கள் இடம்பெயரவேண்டிய சூழ்நிலை எதிர்கொள்ளப்படுகின்றது.

SHARE