மஹிந்த ராஜபக்‌ஷ. இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபன இன்று

107

 

தனது மூன்றாவது பதவிக்காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதிசெய்வதுடன் புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வார் என்று உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடுவதற்கு சர்வதேச, உள்நாட்டு சக்திகள் விரும்புகின்றன.

இந்த சக்திகளுக்கு நான் சிறிதளவும் இடமளிக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் புதிய அரசமைப்பொன்றை அறிமுகப்படுத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அனைவரினதும் ஆதரவுடன் நான் புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவேன்.

ஏனைய கட்சிகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. மஹிந்த சிந்தனை என்ற ஒன்று மாத்திரமே எனது நிலைப்பாடு. இது தேர்தலுடன் மறக்கப்படும் வாககுறுதியல்ல எனவும் குறிப்பிட்டார். நான் குடும்ப அரசியலை பின்பற்றுகிறேன் என்று எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே.- எனவும் தெரிவித்துள்ளார் –

SHARE