ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் ஆயுதக்குழுக்களின் நிலைமை கவலைக்கிடமாகும்.

167

 

Gota-Karuna

மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆடசியமைக்கும் பட்சத்தில் கருணா, பிள்ளையான், கேபி போன்றவர்கள் தண்டிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். அது மட்டுமல்லாது ஏற்கனவே கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற ஆயுதக்குழுக்களின் கொலைகள் பற்றிய விபரங்களும் திரட்டப்பட்டு அதற்கான தண்டனைகளும் வழங்கப்படும் என்று ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் குறிப்பிட்டுள்ளனர்.

images (2)

இத்தகைய ஒரு நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படுகின்றபொழுது இவ்வாயுத அமைப்புக்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும். சிலர் டயர் போட்டு எறிக்கப்படலாம். இன்னும் சிலர் காணாமற்போகலாம். காணாமற்போனோர் தொடர்பாக கண்டறியும் ஆணைக்குழுவிடம் பல சான்றுகள் இருக்கின்றன. இவற்றினையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையை மைத்திரி அரசு ஆரம்பிக்கும்.

குறிப்பாக ருNP யினைப் பொறுத்தவரையில் போராட்டத்தை மீண்டும் கொண்டுசெல்லும். அது தமிழீழவிடுதலைப்புலிகள் தமது செல்வாக்கினைப் பயன்படுத்த அது வழியமைக்கும். உலக நாடுகளில் இருக்கக்கூடிய விடுதலைப்புலிகள் மீண்டும் தமிழீழத்தினை கைப்பற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். ருNP அரசிற்கு போராட்டக்குழுவொன்று இருந்தே ஆகவேண்டும். எந்தவொரு நாட்டிலும் மாபியா குழு இருப்பதுபோன்று ஒரு ஆயுதப் போராட்டக்குழு இருக்குமாகவிருந்தால் இலகுவில் அந்நிய நாடுகள் எமது நாட்டினை கைப்பற்ற முடியாது. ஆகவே தலைவர் பிரபாகரன் கூறியதைப்போன்று ஒருபுலி இருக்கும்வரை எமது போராட்டம் தொடரும். சிங்கள பேரினவாதிகள் ஒருபோதும் எமக்கு வடகிழக்கினை தரமாட்டார்கள்.

LTTE.kp-01 mahinda-kp

ஆகவே கருணா, பிள்ளையான், கேபி போன்றவர்களையும், பிள்ளையானை ஓரங்கட்டினாலும் கருணா, கேபி இருவரும் முக்கியமானரவ்கள். தமிழ்மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்திரமே என உறுதிபடக்கூறலாம். மஹிந்த அல்லது மைத்திரி என யார் வந்தாலென்ன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சார்ந்தவர்களுடனேயே பேச்சுக்களை உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பேசவேண்டும். வேறு எவர் வந்தாலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவரினுடைய கனவும் நிறைவேறும். தமிழ் மக்கள் தமது இனவிடுதலையினை வென்றெடுப்பதற்கு சுலபமாக அது வழியமை

images (1)

 

TPN NEWS

SHARE