தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவைசேனாதிராஜா உற்பட பா.அரியநேந்திரனின் அனந்தி சசிதரன் சிவசக்தி ஆனந்தனின் ஆகியோரும் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளனர்..

148

 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவைசேனாதிராஜாவின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி…

நத்தார் தினத்தினைக் கொண்டாடுகின்ற அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாது அடுத்து பாப்பரசரின் வருகையும் கலைகட்டியிருக்கிறது. இவரின் வருகை மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதொரு விடயமாகும். அத்தோடு தொடர்ந்துவருகின்ற புதுவருடமும் எமக்கு சாந்தி, சமாதானம், சுபீட்சம் நிறைந்ததாக அமையவேண்டும் என்று இந்த கிறிஸ்மஸ் தினத்தில் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

images (1)

கிழக்குமாகாண தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி…

இந்த பாலன் பிறந்த தருணத்தில் எதிர்வரும் புதுவருடத்தில் கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி மலரவேண்டும் என்றும், வடகிழக்கு மக்களுக்கு தீர்வொன்று கிடைக்கவேண்டும் என்றும், அத்தோடு சுபீட்சமான எதிர்காலம் மலரவேண்டும் எனவும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ananthi1

வடமாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி…

மலர்ந்திருக்கும் இந்த கிறிஸ்மஸ் திருநாளில் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு பாலன் பிறந்த இந்த நேரத்தில் இலங்கைத்தீவிலும் சாந்தி, சமாதானம் மலரவேண்டும் என்றும் அராஜகமான ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படவேண்டும் என்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டாலும் கூட இலங்கைவாழ் மக்கள் பாலன் பிறப்பினை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அந்தவகையில் மலரவிருக்கும் புத்தாண்டும் புதிய யுகத்துடன் ஆரம்பிக்கப்பட எனது வாழ்த்துக்கள்.

0611

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி…

உடல், உள, இன விடுதலைக்காக மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலே இயேசு பிரான் பிறந்தது மக்கள் எதிர்பார்க்கின்ற விடுதலைக்காலத்தையும் பெற்றுத்தருவதற்காகவே. ஆகவே இந்தநேரத்தில் மக்கள் தீர்க்கமாக சிந்திக்கவேண்டிய தருணத்தில் இருக்கின்றார்கள். தனிநபர் சுயலாபத்தினை விட்டு சமூக விடுதலைக்காகவும், இனவிடுதலைக்காகவும் கிடைக்கக்கூடிய அரிய சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்த தவறக்கூடாது. வீழ்ந்தவன் எழுவது உலகநியதி. நாம் வீழ்ந்துவிட்டோம் என்று மனக்கவலை கொள்ளத்தேவையில்லை. நாம் எப்பொழுதும் ஒரு தனித்துவம் மிக்க சமுதாயம். அந்த தனித்துவத்தினை பேணும்வகையில் என்றும் நாங்கள் மன உறுதியுடன் இருப்போம் என்று பிறக்கப்போகின்ற புத்தாண்டிலும், இந்த நத்தார் தினத்திலும் உறுதிகொள்வோமாக! என்று எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

SHARE