அரசாங்கம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் 163 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளது.

93

 

முஸ்லிம் காங்கிரஸின் விலகலால் 8 எம்.பிக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளதை அடுத்து அரசாங்கம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் 163 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் மொத்தமாக 184 மக்கள் பிரதிநிதிகள் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் விலகல் காரணமாக அரசாங்கம் கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

 

SHARE