இரா.சம்பந்தன் பா.உ. நாடு திரும்பினார்! -நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

78

 

மருத்துவத் தேவைக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று இரவு கூடி ஆராயவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து பல்வேறு கட்சிகளும் தமது முடிவை அறிவித்துவிட்ட நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறான எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூடி ஆராய்கின்றனர்.

பெரும்பாலும் நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பல தடவைகள் அரச தரப்பினர், கூட்டமைப்பு மைத்திரிக்கே ஆதரவளிக்கும் என்று கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

sam_chan ranil5 PHOTOS-5588e Bajit-Maginta-Tna-01

 

SHARE