நபர்களை பலிவாங்கிய பனிப்பொழிவு: பிரான்சில் அவலம்

110
பிரான்ஸில் உறைநிலைக்கும் கீழே பொழியும் கடும் பனிப்பொழிவால், இதுவரை 5 வீடற்ற நபர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.பிரான்சில் பொழியும் கடும் பனியால், கடந்த சனிக்கிழமியன்று 29 வயது நபர் ஒருவர், வடக்கு பிரான்ஸில் இறந்து போனதாகவும், ஞாயிறன்று மேலும் இருவர் இறந்து போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவர் பாரிஸில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பெய்யும் பனிப்பொழிவால், வெப்ப நிலை பூஜ்யத்திற்கும் கீழே சென்றதாக தெரியவந்துள்ளது.

பிரெஞ்சு அதிகாரிகள் இதுபற்றி தெரிவிக்கையில், அந்த 29 வயது நபருக்கு அவசரவிடுதியில் தங்குவதற்கு இடம் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் திட்டமிட்டே அதனை மறுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரான்ஸில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 453 வீடற்ற மக்கள் அதீத பனிப்பொழிவால் தெருவிலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

SHARE