வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் குளத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

101

 

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் குளத்தில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த முத்தையா தெய்வானை (வயது 69) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குடும்பத் தகராறு காரணமாக நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் கணவனுடன் கோபித்துக் கொண்டு சென்ற மனைவியே இன்று காலை சாஸ்திரிகூழாங்குளம் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, கத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.ரெனி (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேசன் வேலைசெய்து வரும் இவர் கனகராயன்குளம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் இன்று நண்பகல் 2 மணியளவில் அங்கு சென்றபோது வீட்டு விறாந்ததையில் அடிகாயங்களுடன் இறந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக கனகராயக்குளம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmtyBTVKbmp2.html#sthash.7Q4Hw3vk.dpuf

SHARE