முன்னோர் வழங்கிய மூலிகை: செம்பரத்தை

216

அறிவே கோயில் என்பார்கள் ஆன்றோர்கள். அந்த அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் திருவள்ளுவர். தமது துன்பத்தை நீக்கும் வழியை நமது அறிவு கொண்டே நீக்கி கொள்ளவேண்டும். இதற்காகதான் நமக்கு அறிவை இயற்கை படைத்தது. அறிவை கொண்டே அனைத்தையும் அறிய முடியும். இறைவனுக்காக படைக்கப்படும் செம்பரத்தை தங்கசத்து நிரம்பிய மூலிகைகளில் ஒன்று.

சென்நிற மலர்களையும், ஓரங்களில் பற்களுடன் அமைந்த இலைகளையும் கொண்ட செடி. இலையை கசக்கினால் பசைத்தன்மையுடன் இருக்கும். புதுவை மற்றும் தமிழகத்தில் தோட்டங்கள், கோயில் நந்தவனங்களில் அழகு மற்றும் பூசைக்காக வளர்க்கப்படுகிறது. இதன் இலை, வேர், பூ ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை. பெரும்பாலும் செம்பருத்திபூ என்று மக்களால் அழைக்கப்படும். செம்பரத்தையின் நிறம் மற்றும் அடுக்குகளை கொண்டு 11 வகை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்துவதால், வெள்ளை, பெரும்பாடு தீரும். மலமிளக்கியாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படும் தன்மை கொண்டது. இலைச்சாற்றில் தண்ணீர் கலந்து 30 மிலி அளவில் குடித்து வந்தால் வெள்ளைபடுதல் தீரும். இலையை நீரிட்டு காய்ச்சி வடிகட்டிக்கற்கண்டு சேர்த்து பருகினால் நீரெரிச்சல் நீங்கும். இதய பலவீனம் கொண்டவர்கள் பூவை தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து காலை மாலை குடித்து வந்தால் மார்புவலி, இதய பலவீனம் தீரும். இதை குடிக்கும் போது காபி, டீ புகையிலை நீக்கினால் உடனடி பலன் கிடைக்கும்.

பூவை குடிநீர் செய்து அல்லது ஊரல்நீர் செய்து அந்த நீரை நாள்தோறும் வேளை தவறாமல் 35 மிலி வீதம் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். இந்த குடிநீரை பாலுடன் கலந்து குடித்தால் வெள்ளை படுதல் நிற்கும். பூவின் சாறு எடுத்து அதே அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து இரண்டையும் சிறு தீயிட்டு காய்ச்சினால் நீரின் சடசடப்பு அடங்கி சுண்டியபிறகு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டு தலையில் தடவிவர மூளை குளிர்ச்சி அடைந்து முடிகள் செழித்து வளரும்.

அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவ
அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவ
அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப்பிரானும்
அறிவுடையார் நெஞ்சத்துத் தங்கு கின்றானே’’

பூவின் சாறு எடுத்து அதே அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து இரண்டையும் சிறு தீயிட்டு காய்ச்சினால் நீரின் சடசடப்பு அடங்கி சுண்டியபிறகு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டு தலையில் தடவிவர மூளை குளிர்ச்சி அடைந்து முடிகள் செழித்து வளரும். பூவை காய வைத்து பொடித்து கொண்டு அதனுடன் மருதம்பட்டையின் பொடியும் சமஅளவு கலந்து 1 கிராம் அளவில் காலை மாலை பாலில் கலந்து குடித்தால் இதய பலவீனம் தீரும். செம்பரத்தை பூவின் மொக்கை நிழலில் காயவைத்து சூரணம் செய்து இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும்.

செம்பரத்தை பூ 500 கிராம் அளவில் எடுத்து கல்வம் அல்லது அம்மியில் நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையை போதிய அளவிற்கு நீர்விட்டு கரைத்து வடிகட்டி சிறு தீயாக அடுப்பில் எரித்து குழம்பு பதமாக வந்தவுடன் எடுத்து அதில் 15 மிலி அளவில் காலை மாலை சாப்பிட உட்சுடு, நீரெரிச்சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல்வீக்கம், நீர்கட்டு தீரும். செம்பரத்தை வேர்பட்டை, இலந்தை மரப்பட்டை, மாதுளம்பட்டை சமஅளவு எடுத்து சூரணம் செய்து 2 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட இதயபலவீனம் நீங்கும்.

செம்பரத்தை வேர்பட்டை, இலந்தை மரப்பட்டை, மாதுளம்பட்டை சமஅளவு எடுத்து சூரணம் செய்து 2 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட இதயபலவீனம் நீங்கும். செம்பரத்தை வேரும், ஆடாதொடையும் சமஅளவில் எடுத்து குடிநீராக்கி கொடுத்தால் கடுமையான இருமலும் உடனடியாக நிற்கும். நாள்தோறும் ஒரு பூவை காலை நேரங்களில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உடலை பொன்னிறமாக மாற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. பூவின் கஷாயத்துடன் மான்கொம்பு பற்பம் ஒரு கிராம் அளவில் சேர்த்து 10 முதல் 20 நாட்கள் வரை சாப்பிட இதயதுடிப்பு ஒழுங்குபடும்.

படபடப்பு நீங்கும். ரத்தம் சுத்தியாகி புதிய ரத்தம் அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட பாரிச வாயு குணமாகும். செம்பரத்தையில் ஒரு இதழ் கொண்ட பூவின் மகரந்தகாம்பை பறித்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து 5 கிராம் பாலில் சாப்பிட மலடு நீங்கும். தொடர்ந்து 40 நாட்கள் 10 பூக்களை மென்று தின்று பால் குடித்து வந்தால் தாதுவிருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டிபட்டு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூவின் சூரணத்தை முருங்கைப்பூ அல்லது விதை உலர்த்திய தூளும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கி இல்லற இன்பம் அதிகரிக்கும்.

செம்பரத்தை மேகவெட்டை தீராப் பிரமியொடு
வம்பிரத்த வெள்ளை வழுவழுப்பும்-வெப்பும்
பெரும்பாடு ரத்தபித்த பேதம் அகற்றும்
கரும்பா மொழிமயிலே காண்.’’

என்கிறார் அகத்தியர். அழகிற்காகவும், இறைவனுக்காவும் வளர்க்கப்படும் ஒரு மலர், மனிதனின் இதயத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து மனிதகுலம் வாழ்வதற்கு முதன்மையான தாதுவிருத்தியை தந்து மனித இனத்தை வளர்க்கிறது என்பதை அறிந்து, அதை பயன்படுத்தும் வழிகளை கண்டறிந்து சொல்லி சென்ற நமது முன்னோர்கள் வழியில் அளவறிந்து பயன்படுத்தி, வளமோடு வாழ்வோம்.

SHARE