ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வதை தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றனர். அதற்­கேற்ற வகை­யி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானத்தை மேற்­கொண்­டது – சீ.வி.கே.சிவ­ஞானம்

136

 

ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வதை தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றனர். அதற்­கேற்ற வகை­யி­லேயே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானத்தை மேற்­கொண்­டது . இவ்வாறு தெரிவித்துள்ளார் வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவ­ஞானம். சம­கால அர­சியல் நிலைப்­பாடும் அபி­வி­ருத்­தியும் தொடர்­பான கலந்­து­ரை­யாடல் வலி. கிழக்கு பிர­தேச சபை மண்­ட­பத்தில் பிரதேச சபை உப­த­வி­சாளர் க. தர்­ம­லிங்கம் தலை­மையில் நடைபெற்­றது. இந்தக் கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்டு உரை­யாற்றுகை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில் – தமிழத் தேசியக் கூட்­ட­மைப்போ, தமி­ழ­ரசுக் கட்­சியோ தான் ஏற்றுக்­கொண்ட கொள்­கையில் இருந்து சிறி­த­ளவும் வில­க­மாட்டாது. உறு­தி­யான தலை­மைத்­து­­வத்­துடன் உள்­ளது

10885616_1568284440051455_1384933041767163296_n

. இதில் யாரும் சந்­தேகம் கொள்­ளத்­தே­வை­யில்லை. ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­பதன் மூலம் தமி­ழர்­களின் வாழ்க்­கை­யிலோ அர­சியல் உரி­மை­யிலோ மாற்றம் ஏற்­படும் என் பது அர்த்­த­மல்ல. ஏன் வாக்­க­ளிக்க வேண்டும் என கேட்­பது நியாயமல்ல. வாக்­க­ளிப்பை பகிஷ்­க­ரிப்­பதன் மூலமும் மாற்றம் ஏற்­ப­ட­மாட்­டாது. ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு தொடர்­பாக சர்­வ­தேசம் மிக உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்டிருக்­கின்­றது. அண்­மையில் யாழ்ப்­பாணம் வருகை தந்த வெளிநாட்டு தூது­வர்கள் பல்வேறு கருத்துக்களையும் முன் வைத்தனர். அதேநேரம் எமது கோரிக்கைகளை நியா­ய­மா­னது எனவும் ஏற்­றுக்­கொண்­டனர்.

தமிழ் மக்­களின் வாழ்­வி­யலில் அர­சி­யலில் மிக மிக துன்­ப­க­ர­மான காலம் ஜனா­தி­பதி மஹிந்­தவின் ஆட்­சிக்­காலம். அதில் மாற்றம் ஏற்­பட வேண்டும் என தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றனர். அதற்கு அமை­யவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் அர­சியல் சபை நிதா­ன­மாக ஆலோ­சித்து தனது முடிவை அறி­வித்­துள்­ளது. தமிழ் மக்கள் வாக்­க­ளிக்­காமல் தேர்­தலை பகிஷ்கரித்தமையினால்தான் மஹிந்த பத­விக்கு வந்தார். அன்று தமிழ் தரப்பு உறு­தி­யான நிலையில் இருந்­தது. ஆயு­த­பலம் கொண்டி­ருந்­த­மை­யினால் உறு­தி­யான தீர்­மா­னத்தை மேற்கொள்ள முடிந்­தது. இன்று நிலைமை மாறி­விட்­டது. இதனை கருத்தில் கொண்டு காலச்­சு­ழ­லுக்கு ஏற்ப தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இலங்கை அர­சி­யலில் ஒரு கட்சி ஆட்­சியில் இருந்த வேளையில் தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணக்­கூ­டி­ய­தாக இருந்த போதிலும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. ஆனால், தற்­பொ­ழுது பொது வேட்­பாளர் மைத்­தி­ரியை எல்­லோரும் ஆத­ரிக்­கின்­றனர்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஏனைய கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த வகையில் ஏற்படும் அரசியல் மாற்றம் மற்றும் சர்வதேச அழுத்தம் என்பன இலங்கை அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். எமது வாக்கு பலத்தை உரிய முறையில் கையாள வேண்டும்

SHARE