மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

73

நாட்டில் உள்ள 09 மாகாணங்களிலும் வசிக்கும் கணிசமானளவு மக்கள் ஆட்சிமாற்றம் தேவை என்கின்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். அதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்தேன், நாட்டில் அபிவிருத்திகளை செய்தேன் என்கின்ற பெயரிலும் கொடுங்கோலான ஆட்சியினை செய்வதற்கு செயற்பட்டு வந்தார். இறுதியாக அவருடன் அவருடைய செல்லப்பிராணிகளும், அவரின் உறவினர்களுமே எஞ்சியிருப்பார்கள். மஹிந்த அவர்கள் நல்லவராக இருந்தாலும் அவரின் குடும்பத்தினரே அவருக்குத் தெரியாமல் புறமுதுகில் குத்திவிட்டுள்ளார்கள். அதன் விளைவாக மஹிந்த அவர்கள் இன்று சர்வதேச குற்றவாளியாக காணப்படுகின்றாரே தவிர, சர்வதேச குற்றங்கள் நிரூபிக்கப்படவிருக்கும் இறுதித்தறுவாயில் மீண்டுமொருமுறை அவரை ஆட்சியில் அமரச்செய்வது முட்டாள்தனமான விடயம்.

SHARE