மைத்திரிக்குப் பயந்து இந்த நாட்டை விட்டு ஓடுவதா? நான் பிறந்தது இந்த மண்ணில். இறப்பதும் இந்த மண்ணில். என்னை இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற இந்த மைத்திரிக்கு முடியாது.

159

 

வெற்றியின் பின்னர் பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளார்.
கெஸ்பாவையில் நேற்று இரவு இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெறும் நம்பிக்கையை வெளியிட்டார்.

தாம் வெற்றி பெற்றதும் எதிரணியின் தேர்தல் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தாம் நாட்டை துண்டாட விடப் போவதில்லை என்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடக்கில் இருந்து படைக்குறைப்பை செய்யப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மைத்திரிக்கு பயந்து நான் நாட்டை விட்டு ஓடுவதா? -ஜனாதிபதி கேள்வி

பிரபாகரனுக்கே பயப்படாத நான் இந்த மைத்திரிக்கா பயப்படுவேன். என்னை இந்த நாட்டை விட்டு பிரபாகரனுக்கே வெளியேற்ற முடியாமல் போனது.

நான் மைத்திரிக்குப் பயந்து இந்த நாட்டை விட்டு ஓடுவேனா? கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடுவதாக கூறுகிறார் மைத்திரி.

அவர் அறியவில்லை எனக்கு மத்தளையில் ஒரு விமான நிலையம் இருப்பதாக என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்றிரவு கெஸ்பேவயில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

நான் பிறந்தது இந்த மண்ணில். இறப்பதும் இந்த மண்ணில். என்னை இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற இந்த மைத்திரிக்கு முடியாது.

நான் மைத்திரிக்குப் பயந்து இந்த நாட்டை விட்டு ஓடுவதா? எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் கூட்டங்களை இன்று தெற்கில் தேபரவேவயில் ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் ஆரம்பித்தார்.

தேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் கூட்டங்களை இன்று தெற்கில் தேபரவேவயில் ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் ஆரம்பித்தார்.

தேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் கூட்டங்களை இன்று தெற்கில் தேபரவேவயில் ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் ஆரம்பித்தார்.

 

SHARE