ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம்: சம்பந்தன்,- மைத்திரிக்கு ஆதரவு அதிகமாக காணப்படுகின்றது: மாவை,- மைத்திரியை ஆதரிப்பது ஏன்? சுமந்திரன்

113

 

TNA

ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலதிகமாக முடிவை அறிவித்திருக்கிறோம். அந்த முடிவில் உறுதியாக உள்ளோம் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.

தென் இலங்கையில் பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு அதிகமாக காணப்படுகின்றது: மாவை

தென் இலங்கையில் அரசுக்கு எதிராக பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற தீவிரம் வலுவாக இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம் மலையகம் போன்ற பிரதேசங்களில் கூட மஹிந்தவிற்கான எதிர்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி ஊழியர்களை தமக்கு ஆதரவாக அரசு திரட்டியுள்ளது. இராணுவத்தினர், உளவுத்துறையினர் மஹிந்தவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றனர் என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.

கட்சிக்குள் குழப்பமா? மைத்திரியை ஆதரிப்பது ஏன்? வெளிவராத் தகவலுடன் எம்.எ.சுமந்திரன் பா.உ

எமது கட்சி மைத்திரியை தன்னிச்சையாக ஆதரிக்கவில்லை, மாறாக எமது மக்கள் மகிந்த ராஜபக்சவை மூன்றாவது முறை ஜனாதிபதியாக்கக் கூடாது என்பதில் தீவிரத்துடன் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் மைத்திரியின் ஆட்சியில் பங்கெடுப்பதா? இல்லையா? என்பது பற்றியும், லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விபரிக்கிறார்.

– See more at: http://www.tamilnewslk.com/show-RUmtyBTaKbjt6.html#sthash.M6hXhDLU.dpuf

SHARE