பைன் நட்ஸ் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

பைன் நட்ஸ் நார்ச்சத்துகள், ஆர்ஜினைன், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவற்றை உள்ளடக்கியது

இதை தினமும் ஒரு கைபிடி அளவு சாப்பிட்டாலே போதும் உடலில் உள்ள அத்தனை நோய்களையும் விரட்டியடிக்கும் வல்லமை படைத்தது.

இதனை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவு என்றே சொல்லலாம். இதை நொறுக்கு தீனி போல் சாப்பிட்டு வந்தாலே போதும் ஏராளமான உடல் நல நன்மைகளை தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

பைன் நட்ஸ் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்
  • உடல் எடை குறைக்க நினைப்போர் பைன் நட்ஸை கொஞ்சமாக எடுத்தாலே போதும்.
  • பைன் நட்ஸில் உள்ள பைலெனிக் அமிலம் குடலில் சிசிகே என்ற ஹார்மோனை சுரக்கச் செய்து பசியை தடுக்கிறது. சீரண சக்தியை மெதுவாக்கி நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
  • பைன் நட்ஸில் உள்ள பைலெனிக் அமிலம் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது.
  • ஒரு கைப்பிடியளவு பைன் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகி பக்கவாதம், இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
  • பைன் நட்ஸில் உள்ள மக்னீசியம் நமக்கு இருக்கும் சோர்வை போக்கி நம்மை உற்சாகமாக வைக்க உதவுகிறது. நமது உடலில் உள்ள பாதிப்படைந்த செல்களை ஊக்குவித்து ஆற்றலை அதிகரிக்கிறது.
  • பைன் நட்ஸில் உள்ள விட்டமின் கே ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்கிறது. இவை எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது.
  • பைன் நட்ஸில் பீட்டா கரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நல்ல கண் பார்வையை கொடுக்கிறது.
  • பைன் நட்ஸில் உள்ள லுடின் என்ற கண் விட்டமின் நம் பார்வை திறனை மேம்படுத்துகிறது. மற்றும் மாகுலார் டிஜெனரேசன் மற்றும் கண்புரை போன்றவை வராமல் தடுக்கிறது.
  • பைன் நட்ஸில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தை ஜொலிப்பாக்குகிறது.
  • பைன் நட்ஸில் உள்ள விட்டமின் ஈ கூந்தல் உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. வறண்ட, பாதிப்படைந்த தலையை சரி செய்து விடுகிறது.

About Thinappuyal