10 முன்னணி நடிகர்கள் இணைய இருக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி!

இந்த வருடத்தின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் விழா அமைய உள்ளது. இவரது 75வது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளதை ஏற்கனவே அறிந்திருப்போம்.

இந்நிலையில் இந்த விழாவில் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, விஷ்ணு விஷால், அதர்வா முரளி, சந்தானம் மற்றும் நந்தா என மொத்தம் 10 நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனராம்.

மேலும் பல முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாம். இந்த இளையராஜா 75 நிகழ்ச்சி அடுத்த மாதம் 3ஆம் திகதி, சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

About Thinappuyal