மஹிந்தவை விமர்சிக்கும் தகுதி ஜே.வி.பி.க்கு இல்லை

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை விமர்சிப்பதற்கு எவ்வித உரிமைகளும் கிடையாது என  பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.

பொதுஜன  முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தனது எதிர்கட்சி பதவியின் பொறுப்புக்களை முறையாக செயற்படுத்தவில்லை என்று  மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த நான்கு வருட காலமாக எதிர்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடமும், எதிர் கட்சியின் பிரதம கொறடாவாக  மக்கள் விடுதலை முன்னணியினரும் செயற்பட்டனர்.

இவ்விரு தரப்பினரும் முறையான எதிர்கட்சியினராக கடமையாற்றினார்களா. ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிகளாகவே  தொடர்ந்து  செயற்பட்டனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

About Thinappuyal News