தொழில்நுட்ப துறையினை விருத்தி செய்யும் நோக்கில் இரு சட்டங்கள்

தகவல் தொழில்நுட்ப துறையினை விருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் மூன்று மாதங்களில் அமுலுக்கு வரும் வகையில் ‘சைபர் பாதுகாப்பு சட்டம்’ மற்றும் ‘தரவு பாதுகாப்பு சட்டம்’ ஆகிய இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

நவீன தகவல் தொழில்நுடப் துறையில் தகவல்களை பாதுகாப்பதில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தால் இடம்பெறக்கூடிய பல்வேறு துறைசார் பாதகமான விடயங்களை தவிர்த்து, பாதுகாப்புடன் கூடிய புதிய விதிமுறைகளை கையாளும் வகையில் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார்.

About User2