வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்பு

வீடொன்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரிக் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை , கலேவெல, தேவஹூவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர்கள் 53 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரிவிப்பும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About User2