காதலன் குடும்பத்துடன் நயன்தாரா

நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரின் கும்பத்தினருடன் தமிழ் புத்தாண்டு  கொண்டாடிய புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் விக்னேஷ் சிவன் குடும்பத்தினருடன் நேற்று தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் நயன்தாரா.  அப்போது எடுத்த  போட்டோக்களை விக்னேஷ் சிவன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில் காதல், குடும்பம், வாழ்க்கை என நல்ல விஷயங்களால் நிறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்துடன் நயன்தாராவை பார்த்த அவரின் ரசிகர்கள் சீக்கிரம் திருமண புகைப்படத்தை வெளியிடுங்கள் நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம் என்று கூறி வருகின்றனர். நயன்தாரா  100 படங்களில் நடித்த பிறகே இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

About User2