மீனவர் வாடிக்கு தீ வைப்பு

யாழ்-வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவரின் வாடி இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது.

நேற்று முந்தினம் திங்கட்கிழமை இரவு இவ் வாடி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்தால்  வாடியில் இருந்த வலைகள்,  கயிறு ,மீன் கூடை என்பன தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளது.

இவ் வாரம் அம்பன்,  கொட்டோடை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About User2