முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இம்மாதம் 5 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பாடசாலைகளுக்கு இம்மாதம் 11 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் புதிய தவணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

About Thinappuyal News