சீனாவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து ;10 தொழிலாளர்கள் பலி!

சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து தொழிற்சாலையில், நேற்று முன்தினம் மாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத வகையில் அங்கு திடீரென தீப்பரவியுள்ளது.

குறித்த சம்பவத்தால் கரும் புகை மண்டலம் எழுந்து, ஆலை முழுவதையும் சூழ்ந்தது. தீப்பரவலைத் தொடர்ந்து, ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். எனினும் குறித்த தீயில் சிக்கியும், புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு மேலும் 12 பேர் படுகாயம் அடைந்ததா தகவல்கள் வெளியாகியுள்ளது.

About Thinappuyal News