தீ விபத்தால் நான்கு வீடுகள் முற்றாக எரிந்து சேதம்

வத்தளை, மாபொல துவவத்த பகுதியில்  ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த 20 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தின் போது தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

வீடு பலகைகளால் வடிவமைக்கப்பட்டதால் மிக விரைவாக தீ பரவியுள்ளதுடன் தீப்பரவலுக்கு  மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Thinappuyal News