முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் – எஸ். வியா­ழேந்­திரன்

கிழக்குமாகாண தமிழ் பாட­சா­லை­களில் சேவை­யாற்­றி­வரும் முஸ்லிம் ஆசி­ரி­யர்­களை இட­மாற்­றி­வரும் ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்வின் செயற்­பாடு தமிழ் மாண­வர்­க­ளது கல்­வியை பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது.

எனவே கிழக்கில் தமிழ் கல்வி வல­யங்கள், பாட­சா­லை­களை மூடி பெற்றோர் வீதியில் இறங்க வேண்­டி­வரும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ். வியா­ழேந்­திரன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

மட்­டக்­க­ளப்பில் பாட­சா­லை­களில் முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் தொடர்பாக நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியா­ழேந்­திரனின் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற  விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது அவர்  இவ்­வாறு  எச்­ச­ரிக்கை விடுத்தார் .

வியா­ழேந்­திரன் மேலும் கூறு­கையில்,

கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ. எம்.ஹிஸ்­புல்லாஹ் தீவிர நட­வ­டிக்­கை­யாக கிழக்கு மாகா­ணத்தில் உள்ள தமிழ் பாட­சா­லை­களில் கல்வி கற்­பிக்­கின்ற முஸ்லிம் ஆசி­ரி­யர்­களை உட­ன­டி­யாக முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு இட­மாற்றம் செய்­து­வ­ரு­கின்றார்.

மட்­டக்­க­ளப்பு , பட்­டி­ருப்பு, கல்­குடா மண்­முனை மேற்கு என நான்கு தமிழ் கல்­வி­வ­ல­யங்­களில்  மாகாண, தேசிய பாட­சா­லைகள் அடங்­க­லாக 252 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இருக்­கின்­றனர். இதில் கடந்த மூன்று நான்கு தினங்­களில் 120 க்கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் பெற்று முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு சென்­றுள்­ளனர்.

பட்­டி­ருப்பு வல­யத்­திலே 123 ஆசி­ரியர் பற்­றாக்­கு­றை­யுள்­ள­துடன்  61 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் கல்வி கற்­பித்து வரு­கின்­றனர். இதில் 18 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இட­ம்மாறிச் சென்­றுள்­ளனர்.  ஏனை­ய­வர்­களும் செல்­ல­வுள்­ளனர்.  கல்­வி­சாரா ஊழி­யர்கள் 12 பேரும் இவ்­வாறு இட­மாற்ற அனு­மதி கேட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர்

அவ்­வாறே மட்­டக்­க­ளப்பு  வல­யத்தில் 32 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் கற்­பித்து வரு­கின்­றனர். இதில் 9 ஆசி­ரி­யர்கள் இட­மாற்­றப்­பட்­டுள்­ளனர்.  கல்­குடா வல­யத்தில் 71 ஆசி­ரி­யர்கள் வெளி­யே­றி­யுள்­ளனர். மண்­முனை மேற்­கு­வ­ல­யத்தில் 22 முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் வெளி­யே­றி­யுள்­ளனர்.  க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரீட்சை இடம்­பெ­ற­வுள்ள நிலை­யிலும்  2 ஆம் தவணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அதிபர் மற்றும் வல­ய­கல்விப் பணிப்­பா­ளரின் அனு­ம­தி­யில்­லாது இட­மாற்­றத்­துக்கு அனு­ம­தித்­தி­ருப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. பொறுப்­பில்­லாது கிழக்கு மாகாண ஆளுநர் இன­ரீ­தி­யாக செயற்­ப­டு­கின்றார்.

தமிழ் வல­யங்­களில் இருந்த ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை காட்டி முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கி சிறிது காலத்தின்பின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களுடைய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறச் செய்கின்றனர். கிழக்கு மாகாண ஆளுநர் முஸ்லிம்களுக்கான ஆளுநரா ஒட்டு மொத்த கிழக்கு மாகாண மக்களுக்கு ஆளுநரா என சந்தேகம் ஏற்படுகின்றது என்றார்.

About Thinappuyal News