பரீட்­சைகள் உரிய திக­தி­களில் இடம்­பெறும்

4

நாட்டில் நிலவும் அசா­தா­ரண நிலை­மை­களால் எதிர்­வரும் மாதங்­களில் இடம்­பெ­ற­வுள்ள பரீட்­சைகள் ஒரு­போதும் பிற்­போ­டப்­பட மாட்­டாது. குறிப்­பாக எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் இடம்­பெ­ற­வுள்ள தரம் ஐந்­திற்­கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்சை என்­ப­னவும் அட்­ட­வ­ணைப்­படி உரிய திக­தி­களில் இடம்­பெறும் என்று இலங்கை பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் சனத் புஜித தெரி­வித்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர்­குண்டு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இரண்டாம் தவணை கல்வி நட­வ­டிக்­கைகள் இரு­வார காலம் தாம­த­மா­கவே ஆரம்­ப­மா­னது. எனினும் மாண­வர்­களின் வரு­கையும் மிகக் குறைந்­த­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் இரண்டாம் தவ­ணைக்­கான பாடங்­களை உரிய நேரத்­திற்குள் முடிப்­ப­தோடு, பரீட்­சை­களை  நடத்­து­வது சாத்­தி­ய­மா­குமா என்­பது குறித்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும், தற்­போது சகல பாட­சா­லை­க­ளிலும் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே தமது பிள்­ளை­களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். தேவையற்ற அச்சத்தினால் கல்வி நடவடிக்கைகளையோ, பரீட்சைகளையோ பிற்போடுவதால் மாணவர் களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றார்.

SHARE