யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கெகிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மீகஹ, மட்டாடுகம பகுதியில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று பகல் 2 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையல் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட யுவதி 20  வயதுடையவர் என விசாரணையின் பின் தெரியவந்துள்ளது.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About User2