சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒருவர் மரணம்

சிரஞ்சீவி தற்போது சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சைரா நரசிம்ம ரெட்டி என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் கூட வெளிவந்துவிட்டது, மேலும், இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், சுதீப் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ரஷ்யாவை சார்ந்த நடிகர் அலெக்ஸாண்டர் என்பவர் நடித்து வந்தார், படப்பிடிப்பு முடிந்து சில நாட்கள் கழித்து அவர் மயங்கிய நிலையில் சைபர் சிட்டி அருகே இருந்துள்ளார்.

அவரை போலிஸார் மருத்துவமனையில் அனுமதிக்க, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்துள்ளார், இத்தகவல் படக்குழுவை செம்ம சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

About User2