நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாகும் ஹீரோயின்!

நடிகர் அருண் விஜய் அண்மைகாலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சில படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற முக்கியத்துவமான வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நீண்ட நாட்கள் ஓடி நல்ல வசூல் பெற்றது. இதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது விவேக் இயக்கத்தில் பாக்ஸிங்கை மையகமாக வைத்து பாக்ஸர் என்ற படத்தில் இணைந்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக இறுதிசுற்று படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற ரித்திகா சிங் நடிக்கவுள்ளாராம்.

About User2