விகாரையில் தீ விபத்து !

மொரட்டுவை, கட்டுபெத்த வீதியில் உள்ள விகாரை ஒன்றில்  இன்று அதிகாலை  தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

மொரட்டவை, கட்டுபெத்த வீதியில்  அமைந்துள்ள ஸ்ரீ ஞான விமலாராம விகாரையின் மூன்றாவது மாடியிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்சார ஒழுக்கே குறித்த தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

About Thinappuyal News