லுனுகம்வெஹர – பெரலிஹேல பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைக்கு இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் மேலும் 15 இற்கும் மேற்பட்டவர்களுடன் பெரலிஹேல பகுதியில் வீடொன்றில் நேற்றைய தினம் மதுபான விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில், சிலர் அங்கிருந்து வெளியேறினர்.

பின்னர் அவர்கள் மீண்டும் அங்கு வந்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சம்பவத்தில் திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியை சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.