புதையல் தோண்டிய நான்கு பேர் கைது

மொணராகல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்கள் இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொணராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரகலகந்த பாதுகாப்பு வனப்பகுதியில் நேற்று புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இரு பெண்களும்,ஆண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மொணராகலை பிரதான சொத்து பாதுகாப்பு பிரிவினரும் , இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடியாகல மற்றும் மொணராகலை பகுதிகளைச் சேர்ந்த  43,50 ஆகிய வயதுகளையுடைய ஆண்கள் இருவரும் ,வெலியாய , கொடியாகல ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 30 , 43 வயதுகளையுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை மொணராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

About User2