வெசாக் நோன்மதினம் இன்று

புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் என்ற நிலையை அடைந்தமை, பரிநிர்வாணம் போன்ற மூன்று நிகழ்வுகளும் வெசாக் போயா தினத்தில் இடம்பெற்றதாக பௌத்த இதிகாசங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

புத்தர் என்ற நிலையை அடைந்ததன் பின்னர், கிம்புல்வத்புர என்ற இடத்திற்கு விஜயம் செய்து மனித வர்க்கத்திற்கு வழிகாட்டிய நிகழ்வும் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தபெருமானின் 3வது இலங்கை விஜயமும் வெசாக் தினத்தில் இடம்பெற்றிருக்கிறது.

புத்தபெருமானின் புனித சிவனொளிபாதமலைக்கான விஜயமும் இதன் போது இடம்பெற்றிருக்கிறது.

தீகவாபி உட்பட இலங்கையின் 12 இடங்களுக்கு புத்தபெருமான் விஜயம் செய்தது வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விஜயன் 500 தோழர்களுடன் இலங்கைக்கு வருகை தந்ததும் வெசாக் போயா தினத்தில் என்று மஹாவம்சம் கூறுகின்றது. துட்டகைமுனு மன்னன் றுவன்வெலி சாயவை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டிய நிகழ்வும் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News