நாளை யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்யும் பிர­தமர்

1

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று வட­ப­கு­திக்­கான விஜ­யத்­தினை  மேற்­கொள்­ள­வுள்ளார். இன்று காலை  வவு­னி­யா­விற்கு விஜயம் செய்யும்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கு பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும்  பங்­கேற்­க­வுள்ளார். அங்­கி­ருந்து  நாளை காலை  யாழ்ப்­பாணம் செல்லும் பிர­தமர்  நாளையும் நாளை­ம­று­தி­னமும் அங்கு தங்­கி­யி­ருந்து பல்­வேறு நிகழ்­வு­களில்  கலந்­து­கொள்­ள­வுள்ளார்.

நாளை காலை  7மணிக்கு நல்லூர் ஆல­ய த்­திற்கு  செல்லும்   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  அங்கு வழி­பாட்டில்   ஈடு­ப­ட­வுள்ளார். அதன் பின்னர்  காலை 9 மணிக்கு  மயி­லிட்டி   மீன்­பிடி  துறை­மு­கத்­திற்கு  செல்லும்  பிர­தமர்  புன­ர­மைக்­கப்­பட்ட துறை­மு­கத்தை பொது­மக்­களின் பாவ­னைக்கு கைய­ளிக்­க­வுள்ளார்.

இந்த நிகழ்வில்  விவ­சாய மீன்­பி­டித்­துறை அமைச்சர்   பி. ஹரிசன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான துலிப் வெத ஆராச்சி, விஜ­ய­கலா மகேஸ்­வரன், வட­மா­காண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா  உட்­பட பலரும் பங்­கேற்­க­வுள்­ளனர்.

அதனை அடுத்து மயி­லிட்டி வீட்­டுத்­திட்­டத்­திற்கும்   பிர­தமர் விஜயம் செய்­ய­வுள்ளார்.  இத­னைத்­தொ­டர்ந்து திரு­நெல்­வேலி விவ­சாயத் திணைக்­க­ளத்தில் இடம்­பெறும் நிகழ்­விலும் அவர்  பங்­கேற்பார். அதன்  பின்னர் குரு­நகர் மீன்­பி­டித்­து­றை­மு­கத்­திற்கு அவர் விஜயம் செய்­ய­வுள்ளார்.  அன்று மாலை  சாவ­கச்­சே­ரிக்கும்  அவர்  செல்­ல­வுள்ளார்.

மறுநாள் 16ஆம் திகதி  இந்திய கலாசார  கட்டடத்தினை  பார்வையிடும் அவர்  யாழ். செயலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும்  பங்கேற்கவுள்ளார்.

SHARE