பட்டம் பறக்கவிட்டால் தண்டனை : இலங்கை விமான நிலைய அதிகாரிகள்

16

எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து கீலோமீட்டர் சுற்றளவு தூரத்துக்குள் பட்டம் விடுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவித்துள்ள இலங்கை விமான நிலைய அதிகாரிகள், இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிக்குள் பறக்கும் பட்டங்களினால் விமாத்தின் சிறகுகளும், பிற பகுதிகளும் சேதங்களுக்குள்ளாகின்றது.

இவ்வாறு சேதங்களுக்குள்ளாகுவதனால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பும் ஏற்படலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE