ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைக்கும் நடவடிக்கை

6

மேல் மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக, மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வெற்றிடங்களுக்காக, பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள்,  இம் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மேல் மாகாணக் திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில்  இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, இப்பட்டதாரிகள் சேவைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் தொடர்பிலான ஆவணங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணத்திற்கமைய நேர்முகத் தேர்விற்கு அவர்கள் அடுத்த வாரத்தில் அழைக்கப்படவுள்ளதாகவும், மேல் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE