­மடு அன்­னையின் பெரு­விழா இன்று !

6

மரு­த­மடு அன்­னையின் பெரு­விழா இன்று வியா­ழக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.  கடந்த ஆறாம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மான இவ் விழா ஒன்­பது தினங்கள் நவ­நாட்கள் நடை­பெற்­ற­துடன் நேற்றுப் புதன்­கி­ழமை மாலை நற்­க­ருணை விழாவும் இதைத் தொடர்ந்து நற்­க­ருணை பவ­னியும் ஆல­யத்தில் நடை­பெற்­றன.

நாட்டின் நாலா பக்­கங்­க­ளி­லி­ருந்தும் இலட்­சக்­க­ணக்­கான பக்­தர்கள் இவ் விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக வந்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

என்றும் இல்­லா­த­வாறு இம்­முறை பலத்த பாது­காப்­புடன் ஆலய வளா­கத்­துக்குள் நுழைவோர் பரி­சோ­த­னைக்கு உட்­படுத்தப்பட்டு வரு­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்றது.

மடு பரிபா­லகர் அருட்­பணி பெப்பி சோசை அடி­க­ளாரின் மேற்­பார்­வையில் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­ட­கையின் தலை­மையில்  நடை­பெற இருக்கும் இப் பெரு­வி­ழாவில் திருப்­ப­லி­யா­னது பதுளை மறை ­மா­வட்ட ஆயர் மேதகு வின்சன்ட் பெர்­னாண்டோ ஆண்­டகை தலை­மையில் நடை­பெற இருப்­ப­துடன் மன்னார் மறை­மா­வட்ட ஆயர் மேதகு இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­டகை, அனு­ரா­த­புரம் மறை­மா­வட்ட ஆயர் மேதகு நோபட் அன்­றாடி ஆண்­டகை, குரு­நாகல் மறை­மா­வட்ட ஆண்­டகை மேதகு ஹரல்ட் பெரேரா ஆகியோர் இணைந்து திரு­ விழா திருப்­பலியை ஒப்­புக்­கொ­டுப்பர்.

இன்று நடை­பெற இருக்கும் காலை பெரு­விழாத் திருப்­ப­லிகள் அதிகாலை 5 மணிக்கு மடு பரி­பா­லகர் அருட்­பணி பெப்பி சோசை அடி­க­ளாரின் தலைமையில் தமிழ், சிங்கள மொழிகளிலும், இதைத் தொடர்ந்து காலை 6.15 மணிக்கு நான்கு மறைமாவட்ட ஆயர்களின் கூட்டுத் திருப் பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.

SHARE