“சிவப்பு எச்­ச­ரிக்கை இன்று காலை 11 மணி­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­து”-வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம்

6

நாட்டில் நிலவும் சீரற்ற கால­நிலை தொடரும் என்­ப­தோடு கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்­ச­ரிவு தொடர்­பாக பல பிர­தே­சங்­க­ளுக்கு செவ்­வாய்க்­கி­ழமை விடுக்­கப்­பட்ட சிவப்பு எச்­ச­ரிக்கை இன்று காலை 11 மணி­வரை   நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த சில தினங்­க­ளாகப் பெய்யும் அடை மழை கார­ண­மாக களு­கங்கை  மற்றும் கிங் கங்கை ஆகி­ய­வற்றின் நீர்­மட்டம் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு களு கங்­கையின் நீர்­மட்டம் அதி­க­ரித்­த­மையால் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் சில பிர­தே­சங்­களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

அத்­தோடு நாட்டின் பல பகு­தி­களில் பலத்த காற்­றுடன் கூடிய மழை தொடரக் கூடும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. மேல், மத்­திய, சப்­ர­க­முவ, வட மேல் மற்றும் தென் மாகா­ணங்­களில் பலத்த மழை பெய்யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய, சப்­ர­க­முவ மாகா­ணங்­க­ளிலும் காலி, மாத்­தறை, களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் 100 மில்­லி­மீற்றர் வரை மழை பெய்­யக்­கூ­டிய சாத்­தியம் காணப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, பொத்­துவில் தொடக்கம் அம்­பாந்­தோட்டை வழி­யாக திரு­கோ­ண­மலை வரை­யான கடற்­ப­ரப்­புக்­களில் காற்றின் வேகம் 70 – 80 கிலோ­மீற்றர் வரை அதி­க­ரிக்கும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதனால் மீன­வர்கள் கட­லுக்குச் செல்­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நி­லை­யினால் மண் சரிவின் கார­ண­மாக நுவ­ரெ­லியா மாவட்­டமும், வெள்­ளப்­பெ­ருக்கின் கார­ண­மாக இரத்­தி­ன­புரி மாவட்­டமும் அதிக பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் நுவ­ரெ­லியா, அங்­கு­ராங்­கெத்த, அம்­ப­க­முவ மற்றும் கொத்­மலை ஆகிய பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­களைச் சேர்ந்த 157 குடும்­பங்­களைச் சேர்ந்த 644 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 441 குடும்­பங்­களைச் சேர்ந்த 1696 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கேகாலை மாவட்­டத்தில் பலத்த காற்று மற்றும் கன மழையால் 177 குடும்­பங்­களைச் சேர்ந்த 739 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். களுத்­து­றையில் கடந்த ஒரு வார காலத்­திற்குள் கடும் காற்று, பாறை சரிந்து வீழ்ந்­தமை, மரம் முறிந்து வீழ்ந்­தமை என்­ப­வற்றார் 320 குடும்­பங்­களைச் சேர்ந்த 1176 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாந்­தோட்­டையில் கடும் காற்றினால் 67 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று காலி மாவட்டத்தில் 335 குடும்பங்களைச் சேர்ந்த 1195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாத்தறையில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE