அனுமதி இன்றி முதிரை மரக் குற்றிகளை ஏற்றி சென்ற வாகனம் விபத்து: சாரதி தப்பியோட்டம்

7

வவுனியா  சாந்தசோலை சந்திக்கருகாமையில் முதிரை மரக் குற்றிகளை ஏற்றி சென்ற கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் ஓமந்தை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி முதிரை மரக் குற்றிகளை சென்றுகொண்டிருந்தபோதே விபத்திற்குள்ளான நிலையில் அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாருமற்ற நிலையில் வாகனம் நின்றமையால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த  வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த மரங்கள் அனுமதி இன்றி கடத்தபட்டுள்ளதாகவும் தப்பித்து சென்ற சாரதியை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

SHARE