“கடந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களிப்பீர்களானால்  காட்டு யுகத்திற்கே மக்கள் செல்ல வேண்டியேற்படும்” -பிரதமர்

2

கடந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களிப்பீர்களானால்  காட்டு யுகத்திற்கே மக்கள் செல்ல வேண்டியேற்படும்.  கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும் காப்பட் வீதிகளையும் அமைத்திருந்ததே தவிர மக்களுக்கான பொருளாதார ரீதியான அபிவிருத்தியை ஏற்படுத்தவில்லை.

நாம் வட பகுதி மக்களினுடையதும் நாட்டு மக்களி னுடையதுமான பொருளாதார அபிவிருத் தியை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெ டுத்திருக்கிறோம் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் நேற்று  தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்விலும் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியோடு இருதயம் மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு மேலும்   உரையாற்றுகையில்,  கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும் காப்பட் வீதிகளையும் அமைத்திருந்ததே தவிர மக்களுக்கான பொருளாதார ரீதியான அபிவிருத்தியை ஏற்படுத்தவில்லை. நாம் வட பகுதி மக்களினுடையதும் நாட்டு மக்களினுடையதுமான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

நாம் வன்னி பிரதேசத்தை இரண்டாம் தரமாக பார்ப்பதில்லை. யாழ் பிரதேசத்திற்கு எவ்வாறான அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றோமோ அதேபோன்று வன்னி பிரதேசத்திற்கு அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறோம்.

வவுனியாவை பொறுத்தவரை பொருளாதார மத்திய நிலையம்  செட்டிக்குளத்தில் நீர் விநியோக திட்டம்  வீட்டுத்திட்டங்கள்  சுகாதார வசதி மேம்படுத்தல்     திட்டங்களும் இந்த அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நாம் எதிர்வரும் காலங்களில் வன்னி பிரதேசத்தின்  இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை   உருவாக்குகின்ற வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இந்த வேலைத்திட்டமானது தொழிற்சாலைகளை மாத்திரம் அமைத்து தொழில்வாய்ப்புக்களை வழங்குவதாக இருத்தல் கூடாது. தென்பகுதி மக்களுடைய நெல் மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் வடபகுதியில் இருந்தே வருகின்றன. ஆகவே இந்த உற்பத்தியை நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக எவ்வாறு உயர்த்த முடியும் என்பது தொடர்பில் சிந்தித்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.

அதன் ஊடாக வன்னி பிரதேச  இளைஞர்களுக்கு அதிகளவான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியும். அதனையே நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

ஆகவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் சரியான தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். மீண்டும் எமக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதே இவற்றை செயற்படுத்த முடியும்.

இதேவேளை நெதர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நிதியை பெறுவதற்கு முனைப்புடன் செயற்பட்ட முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

மேலும் கடந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களிப்பீர்களானால்  காட்டு யுகத்திற்கே மக்கள் செல்ல வேண்டியேற்படும் என்றார்.

SHARE