“அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பதில் இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்கான காரணம்”

4

கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாகயிருக்கமாட்டோம் என தெரிவிப்பதற்காகவும் அதேவேளை சோபா உடன்படிக்கைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்காகவுமே அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பதில் இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்ஸ் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கில இணையத்தளமொன்றில் எழுதியுள்ள கட்டுரையில் அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்சும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்சும் கோத்தபாயவின் பாதையில் அமெரிக்கா தடைகளை போடாது  என்பதை தெரிவிப்பதற்காக  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராஜபக்சாக்கள் முயற்சி மேற்கொண்டுள்ள இந்த சூழ்நிலையை பயன்படுத்துவதற்காக தக்க தருணத்தில் வெல்ஸ் இலங்கை சென்றார் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார்

அமெரிக்க பிரஜாவுரிமைய கைவிடுவதற்கான கோத்தபாய ராஜபக்சவின் விண்ணப்பத்தினை வேகமாக பரிசீலிப்பதற்கான முயற்சிகளை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என தகவல்கள் தெரிவிப்பதாக் இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார்

மேலும் இது தொடர்பில் காணப்படும் விதிமுறைகளை பின்பற்றாமல் கோத்தபாய ராஜபக்சவின் விண்ணப்பம் குறித்து நெகிழ்வு போக்கினை அமெரிக்கா கடைப்பிடிக்கின்றது  என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் அமெரிக்கா  ஏற்படுத்திக்கொள்ள முனையும் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு வெளியிடாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா பெற்றுக்கொள்ளமுயல்கின்றது

இந்த நோக்கத்துடனேயே அலைஸ்வெல்ஸ் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டார் எனவும் இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார்  தெரிவித்துள்ளார்.

SHARE