அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் காயம்!

6

அமெரிக்காவின் பிலெடெல்பியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரியொருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களிற்காக நபர் ஒருவரிற்கு பிடியாணை வழங்கசென்றவேளை பொலிஸார் மீது சந்தேகநபர்  துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஆவரை  சரணடையுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்த போதிலும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இரு பொலிஸார் உட்பட ஐவர் துப்பாக்கிதாரியுடன் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டனர் பணயக்கைதி நிலைமை உருவானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் விசேட படைப்பிரிவொன்று அவர்களை அந்த வீட்டிலிருந்து மீட்டது என தெரிவித்துள்ள அதிகாரிகள்

குறிப்பிட்ட சட்டத்தரணியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சந்தேகநபர் சரணடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் உள்ளேயிருந்து துப்பாக்கி பிரயோகத்தை கையடக்க தொலைபேசி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE