தம்புள்ளையில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் பலி: இருவர் காயம்

7

தம்புள்ளை – ஹபரணை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை – ஹபரணை வீதியில் மெஹஸ்வெவ என்ற பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து வேன் மற்றும் ரிப்பர் வாகனம் ஆகியன மோதி சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE