” கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வையும், சஜித்பிரே­ம­தா­ஸவையும், இணைய மோத­லுக்குள் சிக்க வைத்­துள்­ளனர் இணை­யத்­தள முடக்­கிகள்”

3

ஜனா­தி­பதித் தேர்­தலில் நேர­டி­யாக மோது­வார்கள் என எதிர்­பார்க்­கப்­படும் கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வையும், சஜித்பிரே­ம­தா­ஸவையும், இணைய மோத­லுக்குள் சிக்க வைத்­துள்­ளனர் இணை­யத்­தள முடக்­கிகள்.

சஜித் பிரே­ம­தா­ஸவின் பெயரில் உள்ள, www.sajithpremadasa.com என்ற இணையத்தளத்­துக்குள் நுழைவோர், கோத்­த­பாய ராஜ­பக்­ஷவின் பெயரில் உள்ள, www.gota.lk  என்ற இணை­யத்­த­ளத்­துக்கு தானா­கவே கொண்டு செல்­லப்­ப­டு­கி­றார்கள்.

அது­போல, கோத்­த­பாய ராஜ­பக்ஷ­வுக்­காக பரப்­பு­ரைகள் செய்­யப்­படும், gotabayarajapakse.comஎன்ற இணையத் தளத்­துக்குள் நுழைவோர்,  சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ர­பூர்வ வலைத்­த­ள­மான http://www.prisons.gov.lk இற்குள் கொண்டு  செல்­லப்­ப­டு­கின்­றனர்.

இணை­யத்­தள முடக்­கி­களின் இந்த சதி வேலை கொழும்பு அர­சியல் வட்­டா­ரங்­களில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எனினும்,  www.sajithpremadasa.com என்ற இணையத்­தளம் தங்­களால் இயக்­கப்­ப­ட­வில்லை என்று அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

இந்த தளத்­துடன் எங்­க­ளுக்கு எந்த தொடர்பும் இல்லை, என்ன நடந்­தது என்­பது குறித்து கருத்து தெரி­விக்க முடி­யாது. இருப்­பினும், நாங்கள் விரைவில் ஒரு புதிய அதி­கா­ர­பூர்வ தளத்தை தொடங்­க­வுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவின் விப­ரக்­கு­றிப்பில் இது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதால் இது தொடர்­பாக தேவை­யான நட­வ­டிக்கை எடுக்க ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

எனினும், கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் பெயரில் உள்ள இணையத் தளத்­துக்குள் நுழைவோர், சிறைச்சாலைத் திணைக்களத்தின் வலைத்தளத்துக்குள் அனுப்பப்படுவது குறித்து கோத்தபாய ராஜபக் ஷ தரப்பின் கருத்து உடனடியாக வெளியாகவில்லை.

SHARE