“வடக்கு, கிழக்கு உட்­பட ஒட்­டு­மொத்த தமிழ்  மக்­களின் ஆத­ர­வி­னையும்  பெற்று ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும்”- செஹான் சேம­சிங்க

8

வடக்கு, கிழக்கு உட்­பட ஒட்­டு­மொத்த தமிழ்  மக்­களின் ஆத­ர­வி­னையும்  பெற்று ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும். தமிழ்  மக்­களை  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­திகள் எவரும் தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்­க­வில்லை. மாறாக  அர­சாங்­கத்தில் இருந்து  வரப்­பி­ர­சா­தங்­களை மாத்­தி­ரமே  பெற்றுக் கொண்­டுள்­ளார்கள் என்று  எதி­ர­ணியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்   பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தமிழ் மக்­களின் ஆத­ர­வினை  முன்னாள் பாதுகாப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு பெற முடி­யாது என்ற தவறான  கருத்­தினை அர­சாங்கம் தற்­போது குறிப்­பிட்டு கொள்­கின்­றது. நிச்­சயம் வடக்கு கிழக்கு உட்­பட ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன் ஆட்சி மாற்றம் ஏற்படும்.  வடக்கு மக்கள் தற்­போது  எவர் தலை­மை­யி­லான ஆட்சி  சிறந்­தது என்பதை தீர்­மா­னித்து விட்­டார்கள். தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அரசி­யல்வா­திகள் எவரும் தமிழ் மக்­களின்  அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­க­வில்லை. மாறாக தேவையற்ற நிறைவே­றாது என்று தெரிந்த ஒரு விட­யத்­திற்கு முக்­கி­யத்­துவம் வழங்கி  காலத்தை வீண­டித்து  தமிழ் மக்­களை தொடர்ந்து ஏமாற்றி வரு­கின்­றார்கள். அரசியல் தீர்வு  என்ற விட­யத்தை குறிப்­பிட்டுக் கொண்டு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. ஆத­ரவு வழங்­கு­வதால் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே பெரிதும் பயனடைந்துள்­ளார்கள். ஆனால் எதிர்­பார்ப்­புடன்  அபி­வி­ருத்­திகள் ஏதும் பெற்றுக் கொள்­ளாத  வடக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளார்கள்.  இறுதியில் அபிவிருத்­தியும்   அர­சியல் தீர்வும்   வெறும் கானல் நீரா­கவே    காணப்படும். மறு­புறம் மலை­யக மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  அரசியல்வா­திகள் பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு  எவ்­வித  நியா­ய­மான தீர்­வையும் பெற்றுக் கொடுக்­க­வில்லை. ஒவ்வொரு வருட ஆரம்­பத்­திலும்  இறு­தி­யிலும் மலைய­கத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்­ப­டு­வது எதிர்­பார்க்கக் கூடி­ய­தொன்­றாக காணப்­ப­டு­கின்­றது. ஆனால் மலையக மக்­க­ளுக்கு  நியா­ய­மான  தீர்­வினை அரசாங்கம் வழங்­க­வில்லை.  அரசாங்­கத்­திற்கு  அழுத்தம் கொடுப்­ப­தாக மலை­யக அர­சி­யல்­வா­திகள்  வெறும் பேச்­ச­ளவில் மாத்­தி­ரமே  கருத்­து­ரைக்­கின்­றார்­களே தவிர  செய­ல­ளவில் எதனையும்   வினைத்­தி­ற­னாக  செயற்­ப­டுத்­த­வில்லை. தமிழ் மக்கள் தொடர்ந்து தம்மை ஏமாற்றி அதில் சொகு­சாக வாழும் அரசியல்வாதிகளுக்கு  ஆத­ரவு  வழங்கு­வதால் எவ்வித பயனும் ஏற்படாது. கடந்த நான்கு வருட காலமாக  அரசாங்கத்தில்  தமிழ் மக்களின் அடிப்படை  பிரச்சினைகள் வெறும்  பேசுபொருளாகவே காணப்பட்டது. நிச்சயம் எமது  அரசாங்கத்தில்  பாதிப்பற்ற விதத்தில் வடக்கிற்கு தீர்வும் மலையக மக்களுக்கு பொருளாதார தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

SHARE