சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு: பெண்ணொருவர் கைது

19

நிட்டம்புவ – வேயன்கொட பகுதியில் மிக சூட்சமமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வேயன்கொட பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் பொலிஸ் குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வேயன்கொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 54 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE