ஹொங்கொங்குடனான தனது எல்லையில் சீனா படையினரை குவிப்பதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகின!

20

ஹொங்கொங்குடனான தனது எல்லையில் சீனா தனது படையினரை குவிப்பதை காண்பிக்கும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஹொங்கொங் எல்லையில் உள்ள சென்ஜென் என்ற நகரில் உள்ள விளையாட்டரங்கில் சீனாவின் இராணுவ வாகனங்கள் பெருமளவில் காணப்படுவதை செய்மதிப்படங்கள் காண்பித்துள்ளன.

கடந்த இரண்டு வாரங்களிற்கு மேல் கடும் ஆர்ப்பாட்டங்களை சந்தித்து வரும் ஹொங்கொங்கிற்கு வடக்கே உள்ள இந்த நகரின் உதைபாந்தாட்ட அரங்கில் 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன.

மக்சார் டெக்னோலஜிஸ் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த செய்மதி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை சிஎன் என்னும் உறுதி செய்துள்ளது.

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து பதற்றநிலை அதிகரித்து வருகின்ற நிலையில் சீனா தனது எல்லையை நோக்கி படையினரை நகர்த்தி வருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹொங்கொங் உடனான எல்லையை நோக்கி சீனா தனது படையினரை நகர்த்துகின்றது என எமது புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

SHARE