சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட தரவரிசை பட்டியல்

13

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

இதன்படி துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (937 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி (903 புள்ளிகள்) 2-வது இடத்திலும், நியூசிலாந்து தலைவர் கேன் வில்லியம்சன் (878 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் (914 புள்ளிகள்) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் காஜிசோ ரபடா (851 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா (835 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் தலைவர் ஜாசன் ஹோல்டர் (472 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார்.

வங்காளதேச அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் (397 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (390 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்

SHARE