பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பால் மகிழ்ச்சியடையும் சர்வதேச மாணவர்கள்

8

பிரித்தானியாவுக்கு மாணவர் வீசாவில் செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கவும் வேலை செய்யவும் முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமரின் கொள்கைக்கு அமைவாகவே இந்த அறிவிப்பு  வெளியாகி உள்ளது.

இதுவரை காலமும் பட்டப்படிப்பின் பின்னர் 4 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும். எனினும் புதிய நடைமுறையின் கீழ் இரண்டு வருடங்களில் பிரித்தானியாவில் தங்கியிருக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் புதிய நடைமுறை அமுலாகவுள்ளது. இதற்கமைய பட்டப்படிப்பு நிறைவு செய்யும் வெளிநாட்டு மாணவர்கள் 2 வருடங்கள் தங்கியிருக்கவும் நீண்டகால வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவுள்ளது.

இலங்கை, இந்தியாவை சேர்ந்த அதிகளவானோர் பிரித்தானியாவுக்கு மாணவர் வீசா மூலம் செல்கின்றனர். இந்நிலையில் பிரித்தானிய பிரதமரின் அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE