கம்பஹாவில் நீர் விநியோகத் தடை

24

கம்பஹா மாவட்டத்தின் றாகம, ஜா-எல, ஏக்கல மற்றும் கந்தானை உட்பட சில பகுதிகளில்  நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெறும் வீதி திருத்தப் பணிகளின் போது, பிரதான நீர்க்குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாகவே நீர் விநியோகத் தடை தற்காலிகமாக ஏற்பட்டுள்ளதாக அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் தற்போது அதனை சீர் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதனால் இன்று பகல் ஒரு மணியளவில் நீர் விநியோக நடவடிக்கை வழமைக்குத் திரும்பும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

SHARE