முல்லைத்தீவில் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

29

முல்லைத்தீவில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகிறது.

வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள காணி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE